தூத்துக்குடி, கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் ஆண்களுக்கான நவீன குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை முகாம் நடைபெறுகின்றது.
தூத்துக்குடி மருத்துவம் மற்றும் குடும்ப நல துணை இயக்குனர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்ட குடும்ப நலத்துறை மற்றும் பொது சுகாதார துறை சார்பாக நவீன தழும்பு இல்லாத ஆண் கருத்தடை சிகிச்சையை ஊக்குவிக்கும் வகையில் இரு வார விழா சென்ற 21ஆம் தேதி முதல் 4-ம் தேதி வரை நடைபெறுகின்றது.
அதிக ஆண்கள் குடும்ப நல கட்டுப்பாடு சிகிச்சையை பெரும் வகையில் கோவில்பட்டி அரசு மருத்துவமனை, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண்களுக்கு குடும்ப நல சிகிச்சை முகாம் அனைத்து வேலை நாட்களும் நடைபெறுகின்றது. மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு அரசு ஈட்டுத் தொகையாக ரூபாய் 1100 மற்றும் சிகிச்சைக்கு அழைத்து வருபவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூபாய் 200 வழங்கப்படுகின்றது என கூறப்பட்டிருக்கின்றது.