கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு மீம்ஸ் போட்டி நடைபெற இருக்கின்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு தூய்மை மற்றும் பாதுகாப்பான தீபம் 2022 என்ற தலைப்பில் விழிப்புணர்வு மீம்ஸ் போட்டி காவல்துறை சார்பாக நடைபெற இருக்கின்றது.
தீபத் திருவிழாவின்போது பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான குற்ற விழிபுணர்வு, நகை பறிப்பு, பிக் பாக்கெட், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள், குழந்தை கடத்தல், சுற்றுச்சூழல் தூய்மை, மூத்த குடிமக்களுக்கான உதவி, தீயணைப்பு பாதுகாப்பு, பிளாஸ்டிக்கை பயன்படுத்தாதீர் குறித்த மீம்ஸ்கள் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயார் செய்து தங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்களை இணைத்து [email protected] என்ற இணையதள முகவரிக்கு அனுப்பலாம்.
இதில் சிறந்த மீம்ஸ் தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று நபர்களுக்கு ஆட்சியர் முருகேஷ் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உள்ளிட்டோர் நினைவு பரிசும் வெகுமதியும் வழங்கப்பட இருக்கின்றது. இதை வருகின்ற 28ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்திருக்கின்றார்.