உதயநிதிக்காக அவர் அலுவலகத்தில் ஆபீஸ் பாய்போல் காத்திருந்ததாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
தமிழ் படங்களை வேற்று மொழிகளில் வெளியிடுவதற்கு கொடுக்கப்படும் நெருக்கடிக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கலாம் என குற்றம் சாட்டியுள்ள நடிகர் விஷ்ணு விஷால் திரைப்படங்களை ரெட் ஜெயண்ட் கட்டாயப்படுத்தி வாங்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை எனவும் குள்ளநரி கூட்டம் திரைப்படத்தை வெளியிட ஆபிஸ் பாய் போல் காத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, ஒரு ஆபீஸ் பாய் போல் நான் அங்கு நின்றேன். எனது திரைப்படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்து கொடுங்கள் என நான் அங்கு நின்றேன். அவங்களுக்கு இதை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவங்களுக்கு இதிலிருந்து ஒன்றும் கிடைப்பதில்லை. இருப்பினும் அவர்கள் எனக்கு குள்ளநரி கூட்டம் திரைப்படத்தை ரிலீஸ் செய்து கொடுத்தார்கள். இதன் பின் எனக்கு நீர்ப்பறவை பட வாய்ப்பை கொடுத்தார்கள். சிலுக்குவார் பட்டி சிங்கம் திரைப்படத்தை எனக்கு அவர்கள் ஆட்சியில் இல்லாத போது ரிலீஸ் செய்து கொடுத்தார்கள். இப்போது அவர்கள் என்னை கூப்பிடவில்லை, நான் தான் அவர்களிடம் போறேன். உதயநிதி சினிமாவை மிகவும் நேசிக்கின்றார். அதனால் தான் ரிலீஸ் செய்கின்றார். அவர்களாகச் சென்று படத்தை ரிலீஸ் செய்வதில்லை. நாங்களாகத்தான் செல்கின்றோம் என தெரிவித்துள்ளார்.