Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நாக்குக்கு பதில் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை… மதுரை அரசு மருத்துவமனையில் ஷாக்கிங் சம்பவம்…!!

நாக்குக்கு மாறாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக குழந்தையின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தை ஒன்றிற்கு நாக்கு அறுவை சிகிச்சைக்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்துள்ள அமீர்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமாருக்கு கடந்த ஆண்டு அக்டோபர் முப்பதாம் நாள் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் நாக்கு வளர்ச்சி அடையாமல் இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு மதுரை அரசு மருத்துவமனையில் அறுவை மேற்கொள்ளப்பட்டது. ஓராண்டு கழித்து மீண்டும் அறுவை செய்ய வேண்டும் என்பதால் மீண்டும் நேற்று முன்தினம் அறுவை செய்வதற்காக குழந்தை அனுமதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் குழந்தையின் நாக்கில் அறுவை செய்வதற்கு மாற்றாக பிறப்புறுப்பில் அறுவை செய்து விட்டதாக குழந்தையின் பெற்றோர் குற்றம் சாட்டினர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள மருத்துவமனை டீன் ரத்தினவேல், அறுவை செய்த மருத்துவர்கள் சரியான முறையில் குழந்தையின் பெற்றோர்களிடம் விளக்கிக் கூறாததால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். குழந்தையின் சிறுநீர் பாதையில் அடைப்பு இருந்ததால் முதலில் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அதன் பிறகு நாக்கில் அறுவை செய்யப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Categories

Tech |