Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தேசிய சிலம்பம் போட்டி… கோவில்பட்டி பள்ளி மாணவர் சாதனை… பாராட்டு விழா..!!!!

தேசிய சிலம்பம் போட்டியில் சாதனை படைத்த கோவில்பட்டி பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

பெங்களூரு மாநிலத்தில் உள்ள லயோலா கல்லூரியில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி கரிதா பப்ளிக் பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவன் நந்தா எட்டு வயது பிரிவில் இரட்டைக் கம்பு சுற்றுதல், தொடும் முறை போட்டி, ஒற்றை கம்பு சுற்றுதல் போட்டிகளில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வென்றிருக்கின்றார். இந்த சாதனையை படைத்த மாணவருக்கு கோவில்பட்டி கரிதா பப்ளிக் பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் தலைமை தாங்க ஆசிரியர்கள் பல மாணவரை பாராட்டி பேசினார்கள்.

Categories

Tech |