நகராட்சி வரிகளை 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையர் அப்துல் ஹாரிஸ் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, திருத்துறைப்பூண்டி நகராட்சி 24 வார்டுகளை கொண்டது. இதில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி, கழிவுநீர் வசதி உள்ளிட்ட பல அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகின்றது.
நகராட்சி பணிகள் மேற்கொள்வதற்காக திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், கடை உரிம கட்டணம் உள்ளிட்ட வரிகளை வருகின்ற 30ஆம் தேதிக்குள் நகராட்சி அலுவலகத்தில் கட்ட வேண்டும். ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில் சட்ட ரீதியாக ஜப்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறப்பட்டிருக்கின்றது.