எடப்பாடி பழனிசாமி புகார் எழுப்பிய நிலையில் தமிழக அரசு மறுத்துள்ளது.
நம்ம ஊரு சூப்பர் இயக்கம் திட்டத்தை செயல்படுத்துவதற்காக விழிப்புணர்வு பதாகைகள் நிறுவியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி கூறிய புகாருக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
விளம்பர பதாகைகள் நிறுவியது குறித்து மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட விவரங்களின்படி அச்சடிக்கும் பணியில் எந்த ஒரு தனி நிறுவனமும் ஈடுபடுத்தவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. இந்த விழிப்புணர்வு பதாகைகள் நிறுவிட பேனர் ஒன்றிற்கு 7906 செலவிடப்பட்டதாக கூறுவது முற்றிலும் தவறானது என அரசு தெரிவித்துள்ளது.