ஒப்பந்தத்தில் இருந்து நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மார்ட்டின் கப்தில் வெளியேறியுள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பத்திலிருந்து அதிரடி வீரர் மார்ட்டின் கப்தில் வெளியேறியுள்ளார். தனது சொந்த வேண்டுகோளின் பேரில் நியூசிலாந்து கிரிக்கெட் உடனான ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த வருடம் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட மூன்றாவது வீரர் மார்ட்டின் கப்தில் ஆவார். T20 லீக் போட்டியின் வளர்ச்சி காரணமாக கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பது குறைந்து வருகின்றது.