கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சுமா மோகன் திருமணம் வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி நடைபெறுகின்றது.
நடிகர் கார்த்திக் மகனான கௌதம் கார்த்திக்கும் நடிகை மஞ்சிமா மோகனும் காதலித்து வந்த நிலையில் அண்மையில் இருவரும் தங்களின் காதலை சமூக வலைதளம் மூலம் உறுதி செய்தனர். இதனிடையே இவர்கள் வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக கௌதம் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
தான் முதலில் மஞ்சிமாவிடம் ப்ரபோஸ் செய்த போது அவர் இரண்டு நாள் நேரம் எடுத்துக் கொண்டு அதன் பின் தனது காதலை ஏற்றுக் கொண்டார் எனவும் அந்த இரண்டு நாட்கள் தனக்கு மிகவும் பயமாக இருந்தது எனவும் தெரிவித்தார். இப்போது எங்கள் காதல் திருமண வாழ்க்கையில் இணைய உள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.