அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக சதி திட்டம் தீட்டி வருவதாக மணீஷ் கிசோடியா குற்றம் சாட்டியுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக சதி திட்டம் தீட்டி வருவதாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் கிச்சோடியா தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை பாரதிய ஜனதா கட்சி கொலை செய்ய திட்டமிடுவதாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
குஜராத் சட்டமன்ற தேர்தல் மற்றும் டெல்லி மாநகராட்சி தேர்தல் தோல்வி காரணமாக பாஜக அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய திட்டமிட்டு வருகிறது எனவும் இதற்கு பாஜகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் திவாரி திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார். இதற்காக மனோஜ் திவாரி குண்டர்களை தயார்படுத்தி உள்ளதாகவும் அரசியல் ஆதாயத்திற்காக அர்ப்ப அரசியலை செய்ய முயற்சிக்கும் பாஜகவால் அரவிந்த் கெஜ்ரிவால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறினார். ஆனால் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற இப்படி பொய்யான குற்றச்சாட்டுகளை மணீஷ் சிசோடியா கூறுவதாக பாஜக பதிலடி கொடுத்துள்ளது.