அரசாங்கத்தை விட நாடு மிகப்பெரியது என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை விட நாடு மிகப்பெரியது எனக் கூறிய ஆளூநர் ரவி தற்சார்பு இந்தியா என்ற இலக்கை நோக்கி வேகமாக செல்ல வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் 11 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா சென்னை தரமணியில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய ஆளுநர் ரவி இந்தியா தற்போது முன்பு போல் இல்லை எனவும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா முதன்மையான இடத்தில் இருக்க போவதாகவும் தெரிவித்தார்.
இலக்கை நோக்கி நாடு இன்னும் வேகமாக செல்ல வேண்டியுள்ளது என கூறிய பயணத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பங்கு தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைய உந்துகோலாக இருக்கும் எனவும் தெரிவித்தார். ரோம பேரரசுக்கு இந்தியாவில் இருந்து தான் ஆடைகள் சென்றது என எத்தனை பேருக்கும் தெரியும் என கேள்வி எழுப்பி ரவி மஸ்லிம் என்கின்ற ஆடை வகை ஆந்திராவில் உள்ள மசூலி பட்டணத்தில் இருந்து தோன்றியதாகவும் 2000 ஆண்டுகளாக இந்தியர்கள் தான் உலக சந்தையில் பெரும் ஆட்டக்காரர்கள் எனவும் கூறினார்.
தற்போது அப்படி இல்லை என்பதால் அதை மீண்டும் சீர் செய்ய முயன்று வருதாக கூறிய ஆர்.என்.ரவி இளைஞர்கள் ரிஸ்க் எடுக்க வருவதாகவும் தெரிவித்தார். அரசை விட நாடு மிகப்பெரியது. மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் பல்வேறு திறமைகள் புதைந்துள்ளது. வாழ்க்கையில் ரசிகர்கள் எந்த துறைகளில் இருந்தாலும் சிறப்பாக செயல்படுங்கள். நீங்கள் வளர்ச்சி அடைந்தால் நாடு தானாக வளர்ச்சி அடையும் எனவும் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.