Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உலக மரபு வார விழா கொண்டாட்டம்… ராமநாதபுரத்தில் தொல்லியல் கருத்தரங்கம்…!!!!

ராமநாதபுரத்தில் தொல்லியல் கருத்தரங்கம் நடைபெற்றது.

தொல்லியல் விழிப்புணர்வை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் வருடம் தோறும் நவம்பர் 15 முதல் 25 வரை உலக மரபு வார விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும் ராமநாதபுரம் சிஎஸ்ஐ கல்வியல் கல்லூரியும் இணைந்து தொல்லியல் கருத்தரங்கத்தை நடத்தியது.

இந்த கருத்தரங்கத்திற்கு கல்லூரி தாளாளர் தேவ மனோகரன் மார்ட்டின் தலைமை தாங்க கல்லூரி முதல்வர் வரவேற்றார். கருத்தரங்கத்தில் தொல்லியல் தடையங்கள் குறித்து சிறப்புரை வழங்கப்பட்டது. மேலும் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவி சிவரஞ்சனி நடுகற்கள், மலைக்குகைகள், மோதிரங்கள், முத்திரைகள், பானை ஓடுகளில் காணப்படும் சங்க கால தமிழ் எழுத்து பொறிப்புக்கள் குறித்து படங்களுடன் விளக்கமாக பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவிகள், பேராசிரியர்கள் என பலர் பங்கேற்றார்கள்.

Categories

Tech |