Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உலோக சாமி சிலைகள் பதுக்கல்… கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு வந்த ரகசிய தகவல்… அதிரடி நடவடிக்கை..!!!

சிலைகள் மற்றும் ஓவியங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பழங்கால உலோக சாமி சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் ஆய்வு மேற்கொண்டதில் பழங்கால சிலைகள் இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் சோதனை செய்ததில் முறையான ஆவணங்கள் இல்லாமல் உலோக சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

தனிப்படை போலீசார் சிலைகளை பறிமுதல் செய்து இதுபற்றி வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் ஓவியத்தை சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்க இருக்கின்றார்கள். இது குறித்து மௌன சாமிகள் மடத்தின் நிர்வாகியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த சிலைகள் மற்றும் ஓவியங்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் வழி வழியாக இருந்து வரும் சிலைகள் மற்றும் ஓவியத்தை பாதுகாக்கும் பணியை தான் செய்து வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்த விவரங்கள் புலன் விசாரணையின் போது தான் தெரியும் என கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறியுள்ளார்கள்.

Categories

Tech |