வட்டார அளவிலான தொழில் ஊக்குவிப்பு சிறப்பு முகாம் இளையான்குடி ஊராட்சியில் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொழில் மையம் மூலமாக வட்டார அளவிலான தொழில் ஊக்குவிப்பு சிறப்பு முகாம் இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. இந்த சிறப்பு முகாமில் பங்கேற்ற உதவி இயக்குனர் சக்திமாய் மாவட்ட தொழில் மையம் மூலமாக கிடைக்கும் கடன்கள் மற்றும் மானியம் குறித்து பேசினார்.
இதில் மாநில ஊரக வாழ்வாதார திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றார்கள். கடன்கள் பெற தேவையான ஆவணங்கள் குறித்து ராஜேஷ் விளக்கம் அளித்தார். இந்த முகாமில் திட்ட வட்டார இயக்க மேலாளர் சுந்தரமூர்த்தி, ஊராட்சி ஒன்றிய நிர்வாக மேலாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.