சசிகுமார் நடித்திருக்கும் நான் மிருகமாய் மாற திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
சவுண்ட் இன்ஜினியராக நடிக்கும் சசிகுமார்(பூமிநாதன்) தனது குடும்பத்தினருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றார். பூமிநாதனை அழைத்து வர அவரின் தம்பி செல்லும்போது ரவுடிகள் ஒருவரை கொலை செய்ய முயற்சிக்கின்றார்கள். காயப்பட்ட அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கின்றார். இதனிடையே பூமிநாதன் தம்பிக்கு தொடர்பு கொள்கின்றார். அவர் சிறிது நேரத்தில் வந்து விடுவதாக கூறுகின்றார். இதனால் கோபமடைந்த ரவுடிகள் கொலை செய்ய முயற்சித்த நபரை காப்பாற்றியதற்காக தம்பியை கொலை செய்கின்றனர்.
தனது கண் முன்பாக தம்பியை சில ரவுடிகள் கொலை செய்வதை பூமிநாதன் பார்த்து பொறுக்க முடியாமல் ரவுடிகளை வேட்டையாட ஆரம்பிக்கின்றார். இறுதியில் தனது தம்பியை கொலை செய்தவர்களை பூமிநாதன் பழிதீர்த்திருப்பாரா? அதிலிருந்து எப்படி மீண்டு வந்தார்? குடும்பத்தை எப்படி காப்பாற்றினார்? என்பதே படத்தின் மீதி கதையாகும். படத்தில் சசிக்குமாரின் நடிப்பில் உணர்வுகள் இல்லை.புதுமுக நடிகர் போல் நடித்திருக்கின்றார்.
ஹீரோயின் நடிப்பு போதுமானதாக இல்லை. பெற்றோர்களாக நடித்திருப்போர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தவில்லை. பாடல் இல்லாத திரைப்படமாக இருக்கும் இப்படத்தில் இயற்கையான சத்தத்தை மட்டுமே ஒலிக்க வைத்து கவனம் வைத்துள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான். மொத்தத்தில் படம் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.