சசிகுமார் நடித்துள்ள காரி திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
சசிகுமாரும் அவரின் தந்தையும் ரேஸ்கோர்ஸில் குதிரைகளை பராமரித்து வருகின்றார்கள். ஒரு போட்டியில் சசிக்குமாரும் அவரின் குதிரையும் பங்கேற்கின்றது. இதனிடையே சசிகுமாரின் நண்பர் மனைவிக்கு கேன்சர் நோய் ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பணத்தை மருத்துவ சேவைக்கு பயன்படுத்த முடியும் என சசிக்குமாரின் நண்பர் அவரிடம் கூறுகின்றார். இதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டு அவருக்காக விட்டுக் கொடுக்கின்றார். இதனால் தோல்வியடைந்த குதிரையை முதலாளி சுற்றிக் கொன்று விடுகின்றார்.
இதனை தாங்க முடியாமல் சசிக்குமாரின் தந்தையும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விடுகின்றார். இந்த குற்ற உணர்ச்சியால் சசிகுமார் அவரின் சொந்த ஊருக்கு செல்கின்றார். அப்போது இரண்டு கிராம மக்கள் ஊர் கோவிலுக்காக சண்டை போடுகின்றார்கள். இதற்கு தீர்வுகாண ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முயற்சிக்கின்றார்கள். இந்த போட்டியில் சசிக்குமாறும் பங்கேற்கின்றார்.
இதில் யார் வெற்றி பெற்றது? விலங்குகள் உணர்வை சசிகுமார் புரிந்து கொண்டாரா? பின்பு என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதி கதையாகும். படத்தில் சசிகுமார் தனித்துவமான கிராம நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுகின்றார். படத்தில் கதாபாத்திரத்திற்கு ஏற்ப தனது எமோஷனை வெளிப்படுத்தியுள்ளார்.
இத்திரைப்படம் மூலம் அறிமுகமாகியுள்ள பார்வதி அருண் தனது அழகான நடிப்பை வெளிகாட்டியுள்ளார். இவரின் நடிப்பு அனைவரும் பாராட்டும் வண்ணம் உள்ளது. படத்தில் நடித்திருக்கும் பலரும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். படத்தில் சில இடங்களில் தொய்வு இருந்தாலும் அது படத்தை பாதிக்கவில்லை. டி.இமானின் இசை படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்றது. மொத்தத்தில் காரி பாராட்டும் வண்ணம் உள்ளது.