அஞ்சலி நடித்துள்ள வெப் தொடரின் டிரைலர் வெளியாகி உள்ளது.
அங்காடி தெரு திரைப்படத்தின் மூலம் பிரபலமான அஞ்சலி அடுத்தடுத்து பல திரைப்படங்களில் வித்தியாசமான கதையில் நடித்து வருகின்றார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் சித்தார்த் ராமசாமி இயக்கத்தில் ஃபால் என்ற வெப்தொடரில் நடித்திருக்கின்றார்.
இதில் முக்கிய நட்சத்திரங்கள் பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்கள். இந்த வெப்தொடரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி வைரலான நிலையில் தற்போது தொடரின் டிரைலர் வெளியாகியிருக்கின்றது. இந்த ட்ரெய்லர் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த தொடர் வருகின்ற டிசம்பர் 9-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.