Categories
சினிமா தமிழ் சினிமா

வித்தியாசமான கதைகளத்தில் கோவை சரளா நடிக்கும் “செம்பி”… வெளியான படத்தின் ரிலீஸ் தேதி..!!!

கோவை சரளா நடிக்கும் புதிய திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

மைனா திரைப்படத்தின் மூலம் சினிமா உலகத்திற்கு இயக்குனராக அறிமுகமான பிரபு சாலமன் தற்போது செம்பி என்ற திரைப்படத்தை இயக்குகின்றார். இத்திரைப்படத்தில் கோவை சரளா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அஸ்வின் குமார், ரேயா, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள்.

ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஏ.ஆர் என்டர்டெயின்மென்ட் சேர்ந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தை நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கின்றார். அண்மையில் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி வருகின்ற டிசம்பர் மாதம் 30ஆம் தேதி படம் வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |