Categories
சினிமா தமிழ் சினிமா

இவ்வளவு நல்லவங்களா இருக்காங்களே இவங்க… கைகளை பிசையும் கமல்… அப்ப இன்னைக்கு வேற லெவல் தான்…!!!

இன்றைய நாளின் முதல் ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ் சீசன் 6 சென்ற அக்டோபர் மாதம் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. தற்போது 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கின்றார்கள். இன்றுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி 48வது நாட்களை நெருங்குகின்றது. இந்த நிலையில் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் கமல் இந்த வார டாஸ்கான நீதிமன்ற டாஸ்க் குறித்து பேசுகின்றார். அதில் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்து இருக்கின்றது. பல மனிதர்களையும் கூட. ஆனால் இந்த விசித்திர வழக்கில் குற்றம் செய்தவர் யார் என்பதே தெரியாமல் விசாரித்து தீர்ப்பும் வழங்கப்பட்டிருக்கின்றது. குற்றம் செய்தவர் யார் என்பது நிஜமாகவே தெரியாதா? இல்லை தெரிவிக்க விரும்பவில்லையா? இவ்வளவு நல்லவங்களா இருக்காங்களே, இவங்க.. இவர்களை என்ன செய்யலாம்? என கூறி கமல் கையை பிசைகின்றார். மேலும் இன்று இரவு என முடித்திருக்கின்றார்.

Categories

Tech |