சிவகங்கையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் தலைமையில் விளையாட்டு மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.
இந்த போட்டியில் 12 வயது முதல் 16 வயது வரை இருப்பவர்களுக்கான 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயமும் தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டெறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்று அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேலு உள்ளிட்ட பல பங்கேற்றார்கள்.