நாட்டறம்பள்ளி அருகே தற்கொலை செய்து கொண்ட மாணவி விஷம் குடிப்பதை வீடியோவாக பதிவு செய்து காதலனுக்கு அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி கருணாநிதி தெருவை சேர்ந்த திருமால் என்பவரின் மகள் சரண்யா. இவர் கிருஷ்ணகிரியில் இருக்கும் கல்லூரியில் எம்.ஏ முதலாம் ஆண்டு பயின்று வந்தார். இந்த நிலையில் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததை தாய் கண்டித்ததால் சென்ற 11-ம் தேதி விஷம் குடித்ததில் சிகிச்சை பெற்று வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. சரண்யா குளிர்பானத்தில் விஷம் கலந்து குடிக்கும் வீடியோவை செல்போனில் பதிவு செய்திருக்கின்றார்.
அதனை தனது காதலனுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அந்த வீடியோவில் “சாரி மாமா, நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்தி விட்டேன் என நினைக்கின்றேன். நான் கண்டிப்பாக வரமாட்டேன். அவ்வளவுதான் போய் சேர்ந்து விடுவேன். சந்தோஷமாக நிம்மதியாக இரு. யாருக்கும் எந்த வித கஷ்டத்தையும் கொடுக்காதே. நான் இருப்பது உனக்கு கஷ்டமாக இருக்கும். நான் கண்டிப்பாக எந்த கஷ்டத்தையும் உனக்கு தர மாட்டேன். என் அம்மாவை பார்த்துக்கோ. நான் உன்னை எவ்வளவு லவ் பண்ணேன் என்பதை புரியாமல் இருக்கின்றாய். உன்னால்தான் நான் என் சாகிறேன். என் அம்மாவை பார்த்துக்கோ. வேறு எதுவும் எனக்காக பண்ணாதே, லவ் யூ மாமா.. பாய்” என பேசி இருக்கின்றார்.