திருவாரூர் மாவட்டத்தில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்ததால் 13 உரக்கடைகளுக்கு தடைவிதித்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம், கொரடாச்சேரி, குடவாசல் ஆகிய பல்வேறு பகுதிகளில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் விவசாயிகள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி உள்ளார்கள். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் யூரியா தட்டுப்பாடு காரணமாக தனியார் கடைகளில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி வேளாண் துறை அதிகாரிகள் பல்வேறு கடைகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள காப்பனாமங்கலம் பகுதியில் இருக்கும் தனியார் உரக்கடையில் உரத்தை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து கடையில் உரம் விற்பனை செய்ய தடை விதித்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இதுபோலவே கூடுதலாக உரம் விற்ற 12 கடைகளுக்கு உரம் விற்பனை செய்ய தடைவிதித்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.