விஜய் சேதுபதி நடித்திருக்கும் டிஎஸ்பி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
பிரபல முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது பொன்ராம் இயக்கி வரும் டி.எஸ்.பி திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக அனு கீர்த்திவாசன் நடித்திருக்கின்றார். மேலும் இத்திரைபடத்தில் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்பந்தன், தீபா, சிங்கம் புலி என பலர் நடித்திருக்கின்றார்கள். படத்திற்கு டி.இமான் இசையமைக்கின்றார். இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 2ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. எனவே திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் பங்கேற்ற விஜய் சேதுபதி பேசியுள்ளதாவது, நான் கமர்ஷியல் படங்கள் அதிகமாக நடிப்பதில்லை. இயக்குனர் பொன் ராமுடன் சேர்ந்த பணியாற்றுவேன் என நினைத்ததில்லை. ஆனால் அவர் சொன்ன கதை என்னை ஈர்த்தது. இத்திரைப்படத்தில் என்னை முழுமையாக மாற்றிவிட்டார். இந்த படத்தில் நடித்தது எனக்கு புது அனுபவமாக இருக்கின்றது. இவ்விழாவிற்கு கமல்ஹாசன் வருவார் என நான் எதிர்பார்க்கவில்லை. அவர் இங்கு வந்து வாழ்த்துவது மகிழ்ச்சியாக இருக்கின்றது. சினிமாவில் எதை புதுமையாக செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு பெரிய ஊக்கமாக நீங்கள் இருக்கின்றீர்கள். நீங்கள் செய்த சாதனைகள் இன்னும் பல தலைமுறைகள் கடந்து பேசும். சினிமாவில் சாதிக்க பலருக்கும் ஊக்கமாக இருக்கும். உங்களுக்கு எங்களின் நன்றி என பேசி இருக்கின்றார்.