எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான “சிரித்து வாழ வேண்டும்” திரைப்படம் தற்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு திரைக்கு வர இருக்கின்றது.
எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், ரிக்ஷாக்காரன், ரகசிய போலீஸ், எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட திரைப்படங்கள் டிஜிட்டல் புதுப்பிக்கப்பட்டு திரைக்கு வந்த நிலையில் அந்த வரிசையில் தற்போது எம்.ஜி.ஆர்-லதா இணைந்து நடித்த சிரித்து வாழ வேண்டும் என்ற திரைப்படம் தற்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு திரைக்கு வர இருக்கின்றது.
இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள வடபழனியில் நடைபெற்றது. இதற்கு முன்னாள் மேயர் சைதை துரைசாமி தலைமை தாங்க அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் மற்றும் நடிகரான சரத்குமார் பங்கேற்றார். பின் ட்ரெய்லரை அவர் வெளியிட நடிகை லதா பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் பிரபலங்கள் பலரும் பங்கேற்றார்கள்.