லவ் டுடே திரைப்படம் பல மடங்கு லாபத்தை அள்ளிக் கொடுத்து பிளாக் பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கி தானே நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் தற்போது ரசிகர்களை கவர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருவதோடு வசூல் சாதனையும் படைத்து வருகின்றது.
5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படமானது தற்போது 15 மடங்கு லாபத்தை பெற்றுள்ளது. இத்திரைப்படம் முதல் நாளில் மட்டும் இரண்டு புள்ளி 2.25 கோடிக்கு மேல் வசூல் செய்தது. மேலும் கூடிய விரைவில் உலக அளவில் ரூபாய் 100 கோடி வசூலை இத்திரைப்படம் எட்டும் என சொல்லப்படுகின்றது.