Categories
சினிமா தமிழ் சினிமா

“ப்ப்ப்ப்ப்ப்பா… தலை வணங்குகிறேன்…!” காந்தாரா படத்தை பாராட்டிய திரிஷா..!!!!

கந்தாரா திரைப்படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டுள்ளார் திரிஷா.

கன்னடத்தில் செப் 30-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளியது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. கன்னடத்தில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இத்திரைப்படம் உலக அளவில் ரூபாய் 400 கோடி வசூல் செய்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது.

சில நாட்களுக்கு முன்பாக ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த நிலையில் இத்திரைப்படம் குறித்து நடிகை திரிஷா கருத்து தெரிவித்துள்ளார். இத்திரைப்படத்தை பார்த்த திரிஷா, கிளைமாக்ஸில் இடம்பெற்றுள்ள வராஹரூபம் பாடல் காட்சியை பதிவு செய்து “ப்ப்ப்ப்ப்ப்பா…. தலை வணங்குகிறேன்” என படத்தின் இயக்குனர் ரிஷப் செட்டி, கதாநாயகி சப்தமி கவுடா, கிஷோர், மானசி சுதிர் உள்ளிட்டோரை டேக் செய்து பதிவிட்டு இருக்கின்றார்.

Categories

Tech |