Categories
சினிமா தமிழ் சினிமா

பிரிந்த மனைவியுடன் ஒன்றாக… தியேட்டரில் படம் பார்க்க வந்த பாலா…. ஆச்சரியத்தில் ரசிகாஸ்..!!!

பிரிந்த தனது மனைவியுடன் ஒன்றாக படம் பார்க்க வந்த பாலாவின் வீடியோ வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமா உலகில் அன்பு, காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம் உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருப்பார் நடிகர் பாலா. இவர் வீரம் திரைப்படத்திலும் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார். 2010ஆம் வருடம் பாடகி அம்ருதா சுரேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கின்ற நிலையில் சென்ற 2016 ஆம் வருடம் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றார்கள். இதன்பின் பாலா சென்று 2021 ஆம் வருடம் கேரளாவை சேர்ந்த டாக்டர் எலிசபெத் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

கருத்து வேறுபாடு மறந்து மனைவியுடன் ஒன்றாக படம் பார்த்த பாலா Entertainment பொழுதுபோக்கு

இத்திருமணம் நடந்து ஒரு வருடமே ஆகியிருக்கும் நிலையில் சென்ற சில வாரங்களுக்கு முன்பாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். இது குறித்து சோகமாக பாலா பதிவிட்டிருந்தார். மேலும் எலிசபெத்தை விமர்சித்தவர்களிடம் அவரை விமர்சிக்க வேண்டாம் எனவும் கால அவகாசம் கொடுப்போம் எனவும் கூறி இருந்தார். இந்த நிலையில் தற்போது கணவன்-மனைவி இருவரும் தங்களின் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றாக படம் பார்க்க வந்த நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. கணவன்-மனைவி இருவரும் தியேட்டருக்கு படம் பார்க்க வந்த போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |