Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நவம்பர் மாதத்தில் குறைந்த அளவே பெய்த மழை… நிரம்பாத ஏரி, குளங்கள்… விவசாயிகள் கவலை..!!!

சென்ற வருடத்தை விட நவம்பர் மாதத்தில் மழை குறைந்திருப்பதால் ஏரி, குளங்கள் நிரம்ப வில்லை.

கடலூர் மாவட்டத்தில் நவம்பர் 26ம் தேதி வரை பருவமழை சராசரியாக 305.2 மி.மீ ஆகும். சராசரியை விட தற்போது அதிகமாக மழை பெய்துள்ளது. ஆனால் சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது குறைந்த அளவே மழை பெய்து இருக்கின்றது. சென்ற வருடம் வடகிழக்கு பருவ மழை நவம்பர் 26ம் தேதி வரை 537 மி.மீட்டர் மழை பெய்திருந்தது. சராசரியை விட அதிக அளவு மழை பெய்தாலும் ஒரு சில ஏரி, குளங்கள் மட்டுமே நிரம்பி இருக்கின்றது. பல ஏரிகளில் குறைவான சதவீதமே நிரம்பிய நிலையில் குறிஞ்சிப்பாடி தாலுகாவில் ஆறு ஏரிகளில் ஒரு ஏரி கூட முழுமையாக நிரம்ப வில்லை. மேலும் ஒரு ஏரியில் முற்றிலுமாக தண்ணீர் இல்லை.

இதற்குக் காரணம் சென்ற சில வருடங்களாக நீர்வரத்து வாய்கால்களை சரியாக தூர்வாராமல் பராமரிக்கவில்லை. இதனால் மழை காலங்களில் வாய்க்காலில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியும் ஏரி, குளங்களுக்கு முழுமையாக செல்லவில்லை. பல ஏரிகளில் இருக்கும் மதகுகள் பல வருடங்களாக சீரமைக்கப்படாததால் தண்ணீர் வெளியேறிக் கொண்டே இருக்கின்றது. இதனால் கிணற்று பாசனத்தை நம்பி தான் விவசாயிகள் சாகுபடி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றார்கள்.

Categories

Tech |