Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தனியார் சர்க்கரை ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும்…. காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு…!!!

கபிஸ்தலம் அருகே இருக்கும் தனியார் சர்க்கரை ஆலை தமிழக அரசே எடுத்து நடத்த வேண்டும் என விவசாயிகள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

தஞ்சை மாவட்டத்திலுள்ள சுவாமிமலையில் கரும்பு விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு விவசாயி நாக முருகேசன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் பின்வருமாறு, கபிஸ்தலம் அருகே இருக்கும் திருமன்றங்குடி தனியார் சர்க்கரை ஆலை, விவசாயிகள் பெயரில் வாங்கிய வங்கி கடன் மற்றும் கரும்பு கிரயத்தில் விவசாயிகள் வாங்கிய கடனுக்காக பிடித்தம் செய்து வங்கிக்கு அனுப்பாமல் இருக்கும் கடன் தொகை முழுவதையும் தீர்த்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.

மத்திய அரசின் கரும்பு கிரைய தொகை தமிழக அரசு அறிவித்த கரும்பு பணம், வாகன வாடகை, வெட்டுக்கூலி முழுவதையும் வட்டியுடன் விவசாயிகளுக்கு ஒரே தவணையில் தர வேண்டும்.
இல்லையென்றால் ஆலை நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். வருகின்ற 30ஆம் தேதி ஆலை முன்பாக காத்திருப்பு போராட்டம் நடத்துவது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Categories

Tech |