கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என ஆட்சியர் கூறியுள்ளார்.
தேனி மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தில் கனிம வளங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, குவாரிகளில் இருந்து கனிம வளங்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருக்கின்றது.
தேனி மாவட்டத்தில் இயங்கி வரும் 32 உடைகல் குவாரி, 9 மண் குவாரி, கிராவல் குவாரி உள்ளிட்டவற்றிலிருந்து கனிமங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவிகளை பொருத்த வேண்டும். இதனை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.