கிசான் பயனாளிகள் தவணை தொகையை பெறுவதற்கு ஆதார் எண்ணை 30ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டம் சென்ற 2018 ஆம் வருடம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் மூலம் சொந்தமாக நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்களுக்கு உதவி தொகையாக நான்கு மாதத்திற்கு ஒரு முறை 2000 வீதம் வருடத்திற்கு 6000 என மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகின்றது.
நடைபாண்டில் 13வது தவணையாக டிசம்பர் முதல் மார்ச் முடிய இருக்கும் காலத்திற்கான தவணையை பெற ஆதார் எண்ணை கிசான் இணையத்தில் இணைத்து 30ஆம் தேதிக்குள் உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. இதனால் இ-சேவை மையம் அல்லது தங்களின் கைப்பேசி மூலம் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.