பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து நடிகர் சக்தி உருக்கமாக பேசியுள்ளார்.
விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் 6-வது சீசன் ஓடிக்கொண்டிருக்கின்றது. தற்போது ஆறாவது சீசனில் ஏழாவது வாரம் முடிந்து விட்டது. இந்த நிகழ்ச்சி பலருக்கு நல்ல எதிர்காலத்தை தந்தாலும் சிலருக்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. அந்த வகையில் பிக்பாஸ் முதல் சீசனில் பிரபலத்தின் மகன் என்ற அடையாளத்தோடு போட்டியாளராக நுழைந்தார் சக்தி.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது, மன அழுத்தத்தில் இருந்து வெளியே வரத்தான் அந்த நிகழ்ச்சிக்கு சென்றேன். ஆனால் இந்த நிகழ்ச்சி என் வாழ்க்கையை நாசமாக்கி விட்டது. அங்கிருந்தவர்கள் என்னை வேறு திசைக்கு திருப்பி மன உளைச்சலை ஏற்படுத்தினர். இதனால் கெட்ட பெயர் தான் மிச்சம். என் வாழ்க்கையே போனது என உருக்கமாக பேசி இருக்கின்றார்.