விடிய விடிய பெய்த கனமழையால் கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ததால் ஆறு, குளம், அணைகள் உள்ளிட்டவற்றில் நீர்வரத்து அதிகரித்தது. சென்ற சில நாட்களாக மழை பெய்யவில்லை. வெயிலில் தாக்கவும் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் போடியில் திடீரென கனமழை பெய்ய ஆரம்பித்தது.
இதனால் சாலையில் மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்த மழையால் போடி அருகே இருக்கும் கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருக்கின்றது. ஆற்றின் குறுக்கே இருக்கும் பிள்ளையார் தடுப்பணையில் அருவி போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றது.