கம்ப்யூட்டர் என்ஜினீயர் வீட்டில் 9¾ பவுன் நகைகளை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் முல்லைநகர் பகுதியில் வசித்து வரும் ரமேஷ்குமார் என்பவர் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி ரமேஷ்குமார் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் வீட்டிற்கு சென்றபோது காவது உடைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பொருட்கள் சிதறி பீரோவில் இருந்த 9¾ பவுன் நகைகள் காணமல் போயிருந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து ரமேஷ்குமார் நாமக்கல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து ஜெயபால் வீட்டில் திருடிய நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.