நம் வாழ்க்கையில் மாணவப்பருவம், இளைஞர் பருவம், குடும்பஸ்தானம், வயோதிகப் பருவம் என்று பல நிலைகள் உள்ளது.ஒவ்வொரு நிலைகளையும் நாம் தாண்டி வரும் பொழுது பல சிக்கல்களை சந்தித்து வருகின்றோம். அதிலும் இளைஞர்கள் படித்து முடித்ததும் வேலையில் சேருவது மிகப்பெரிய நிலைப்பாடாக உள்ளது. ஒவ்வொரு பிள்ளைகளின் பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளுக்கு குறிப்பிட்ட வயது வந்தவுடன் வரன் தேட ஆரம்பிக்கின்றனர். சிலருக்கு வேகமாக வரன் அமைந்து திருமணம் நடைபெற்று விடும். அதேசமயம் சிலருக்கு வரன் சீக்கிரமாக அமையாது. மேலும் பல தடைகள் ஏற்படும். இதனால் அந்த இளைஞரின் பெற்றோர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் 90 கிட்ஸ்களின் திருமணம் குறித்து பலரும் சமூக வலைதளங்களில் கிண்டலும், கேலியும் செய்து வருகின்றன. இது 90களில் பிறந்த இளைஞர்களுக்கு மிகுந்த மன உளைச்சல் ஆகின்றது. எனவே திருமண தடை நீங்குவதற்கு சில பரிகாரங்களை செய்தால் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். ஒருவரது ஜாதகத்தில் புனர்பூ தோஷம் இருந்தால் அவர்களுக்கு திருமணம் நடைபெறுவதில் கால தாமதம் போன்ற தடை ஏற்படும். ஒருவழியாக திருமணம் நடைபெற்றாலும் அவர்களின் இல்லற வாழ்வில் விரிசல் ஏற்படும்.
இந்த தோஷம் உள்ளவர்கள் திருமணஞ்சேரி தளத்திற்கு சென்று முறையாக பரிகாரம் செய்தால் இந்த தோஷத்தில் இருந்து விடுபட முடியும். அது மட்டுமில்லாமல் குலதெய்வ கோயிலுக்கு அடிக்கடி சென்று வரலாம். முடி காணிக்கை செலுத்துவது மிகவும் நல்லது. தொடர்ச்சியாக 3 பவுர்ணமி நாட்களில் விரதம் இருந்து திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று 9 துறவிகளுக்கு வஸ்திர தானம் செய்து வந்தால் திருமணத் தடை நீங்கி நல்ல வரன் உங்களுக்கு கிடைக்கும்.