ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ஓவியத்தை வரைந்து பள்ளி மாணவன் சாதனை படைத்திருக்கின்றார். தனியார் பயிற்சி பள்ளியில் பயின்று வரும் மாணவன் சாருகேஷ் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தை போற்றும் விதமாக 17 மணி நேரத்தில் அவர் பிறந்த ஒன்பதாவது மாதத்தை நினைவு கூறும் வகையில் 9 அடியிலும் சுமார் 1700 முறை அவரது பெயரை எழுதியும் ஓவியம் வரைந்து சாதனை படைத்திருக்கின்றார். பள்ளி மாணவன் சாருகேஷ் இதற்கு முன் சுதந்திர தினத்தன்று கல் உப்பால் பிரதமர் மோடியின் படம் வரைந்து சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிலையில் அந்த மாணவன் மீண்டும் பிரதமர் மோடியின் படம் வரைந்து இருக்கின்றார். பிரதமர் பிறந்தநாள் அன்று குஜராத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் பெயரை பயன்படுத்தி ஓவியம் வரைந்து சாதனை படைத்திருக்கின்றார். மேலும் சாதனைகளை தொடர்ந்து செய்து வரும் பள்ளி மாணவன் சாருகேஷ் அனைவராலும் பாராட்டப்படுகின்றார். அவரது பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் மாணவனை பாராட்டி வருகின்றார்கள்.