தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை கிழக்கு போக்குவரத்து இணை ஆணையர் பாலகிருஷ்ணன் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி சென்னை சைபர் கிரைம் பிரிவு எஸ்பி ஆக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை கிழக்கு போக்குவரத்து இணை ஆணையராக ஓம் பிரகாஷ் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.