Categories
சினிமா தமிழ் சினிமா

9 பிறந்தநாள்களில் இது மிகவும் ஸ்பெஷல்….! இப்போ நீ அதிக அழகு…. மனைவிக்கு வாழ்த்து சொன்ன விக்கி…!!!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இரண்டு பேரும் கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து நான்கு மாதங்களே ஆன நிலையில் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராகியுள்ளனர். இது பல சர்ச்சைகளுக்கு ஆளானது. இருப்பினும் சட்டங்களை முறையாக பின்பற்றி தான் குழந்தை பெற்றெடுத்ததாக விளக்கம் அளித்தனர்.

இந்த நிலையில் இன்று நயன்தாரா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் அவரின் கணவர்விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுவரை இருவரும் இணைந்து கொண்டாடிய 9 பிறந்தநாள்களில் இது மிகவும் ஸ்பெஷல். இதுவரை பார்த்ததைவிட ஒரு தாயாக பார்க்கும்போது அதிக மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், அதிக அழகுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இனி வரும் பிறந்தநாட்களும் இதை போன்றே மகிழ்ச்சியுடன் இருக்குமாறு வாழ்த்தியுள்ளார்.

Categories

Tech |