இலங்கையில் 9 மந்திரிகள் நேற்று புதிதாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
இலங்கை அதிபர் கோத்பய ராஜபக்சே முன்னிலையில் புதிய மந்திரிகள் நேற்று காலை பதவி பிரமாணம் எடுத்துள்ளனர். இந்நிலையில் துறைமுகங்கள், கடற்துறை மற்றும் விமான சேவையில்: நிமல் சிறிபால டி சில்வா, கல்வித்துறை மந்திரியாக : சுசில் பிரேமஜயந்த, சுகாதாரத்துறை மந்திரியாக : கெஹெலிய ரம்புக்வெல,
நீதி, சிறைச்சாலைகள், அரசியலமைப்பு சீர்திருத்தம் மந்திரியாக: விஜேதாஸ ராஜபக்ஸ, சுற்றுலாத்துறை மற்றும் காணி மந்திரியாக: ஹரின் பெர்ணான்டோ, பெருந்தோட்டத்துறை மந்திரியாக: ரமேஷ் பத்திரண, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மந்திரியாக: மனுஷ நாணயக்கார, வர்த்தகம், வணிகம், உணவு போன்ற பாதுகாப்பு மந்திரியாக: நலின் பெர்ணான்டோ, பொதுமக்கள் பாதுகாப்பு மந்திரியாக : டிரான் அலஸ், மற்றும் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவி பிரமாணம் செய்துகொண்டனர்.