Wakefit.co என்ற நிறுவனம் இரவு நல்ல தூக்கத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக தூக்க வேலைவாய்ப்பின் இரண்டாவது சீசன் தொடங்கியுள்ளது.
இந்த நிறுவனம் ஏற்கனவே இதுபோன்ற தூக்க வேலைவாய்ப்பு என்ற முதல் சீசன் தொடங்கியது. இதை அடுத்து இரண்டாவது சீசனை தற்போது தொடங்கியுள்ளது. மேலும் இதில் 100 நாட்களுக்கு ஒன்பது மணி நேரம் தூக்கத்திற்கு தலா ஒரு லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலையில் இந்தியாவின் ஸ்லீப் சாம்பியன் என்ற பட்டத்தை வெறும் நபர்களுக்கு 10 லட்சம் வெகுமதி தருவதாகவும் அறிவித்துள்ளது.
இதுவரை இந்தப் போட்டிக்கு 3 லட்சம் வரை விண்ணப்பங்கள் பெற்றுள்ளது. நீங்கள் செய்யவேண்டியது ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்று இருந்தால் அதற்கான நகல் மற்றும் படுத்தவுடனே பத்து முதல் இருபது நிமிடத்தில் தூங்கும் திறனை கொண்டிருத்தல் வேண்டும். இது குறித்து நிறுவனத்தின் இணை நிறுவனர் சைதன்யா ராமலிங்கெவுட பேசியபோது இந்த ஆண்டு நாம் அனைவருக்கும் தூக்கமில்லாத ஆண்டாகவே மாறியுள்ளது. ஏனெனில் கொரோனா .
கொரோனாவின் காரணமாக மன அழுத்தம் மற்றும் வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறைகள், தாமதமான தூக்கம், தூக்கமின்மை என்ற பல பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ளோம். எனவே அதை மாற்றும் விதமாக இந்த வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார். நம் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது தூக்கம். இந்த பயிற்சியில் பங்கேற்கும் அனைத்து பயனர் தரவும் எங்கள் ஸ்லீப் இன்டர்ன்ஷிப் மைக்ரோசைட்டில் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.