மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மாணவர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனும், அதே பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் 14 வயதான மாணவியும் நீண்ட நாட்களாக பழகி வந்துள்ளனர். இவர்களது பழக்கம் காதலாக மாறியது. இதைதொடர்ந்து மாணவியிடம் திருமணம் செய்யபோவதாக கூறி மாணவர் பாலியல் பலாத்காரம் செய்ததால் அவர் கர்ப்பமாகியுள்ளார். இதைத்தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு சிறுவனிடம் அந்த மாணவி பழகி வந்துள்ளார்.
அந்த சிறுவனும் ஏற்கனவே கர்ப்பமாக இருந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டு வயிறு பெரியதாக இருந்துள்ளது. இதனால் பெற்றோர் அந்த மாணவியை ஜெயம்கொண்டாம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் 9 மாத கர்ப்பிணியாக இருப்பதை பெற்றோரிடம் தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சியான மாணவியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் தெரியவந்தது. மாணவியின் பெற்றோர் பணியின் காரணமாக அடிக்கடி வெளியூர் சென்று வந்துள்ளனர். இதை அறிந்த அந்த மாணவர், மாணவி தனியாக இருந்த சமயத்தில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து அந்த 2 மாணவர்களிடம் ஜெயங்கொண்டான் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர்.