Categories
சென்னை மாவட்ட செய்திகள்

9 மாத குழந்தையுடன் சென்ற ஆசிரியை…. பள்ளிகூடத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

9 மாத பெண் குழந்தை தண்ணீர் வாளிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள பல்லாவரம் தர்கா சாலையில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவி உள்ளார் இவர் தனது வீட்டிற்கு அருகே இயங்கும் மழலையர் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு கவிஸ்ரீ இத்திகா என்ற 9 மாத பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் ஜெயஸ்ரீ வேலை பார்க்கும் பள்ளிக்கூடத்தில் 4 குழந்தைகள் மட்டுமே படித்து வருகின்றனர். நேற்று காலை ஜெயஸ்ரீ தனது குழந்தையுடன் பள்ளிக்கூடத்திற்கு சென்றுள்ளார்.

இதனை அடுத்து பள்ளிக்கூடத்தின் 2-வது அறையில் இருக்கும் கழிப்பறைக்கு சென்ற குழந்தை தண்ணீரில் தவறி விழுந்துவிட்டது. இதனால் தண்ணீரில் மூழ்கி கவிஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தாள். இதனை அடுத்து குழந்தையை காணாமல் தேடிய ஜெயஸ்ரீ தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |