ஆஸ்திரேலியாவின் சுமார் 118 அடி உயரத்திலிருந்து ஒரு நபர் தன் 9 மாத குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு ஆஸ்திரேலியாவில் கிசுகிசுக்கும் சுவர்(whispering Wall) என்ற சுற்றுலாத்தலம் உள்ளது. இது ஒரு அணையின் சுவராகும். இதன் முக்கிய சிறப்பு, சுமார் 100 மீட்டர் நீளத்தில் இருக்கும் இந்த அணையின் ஒரு பக்கத்திலிருந்து கிசுகிசுக்கும் குரலில் நாம் கூறுவது அந்த சுவரின் மறுபுறம் இருப்பவர்களுக்கு நன்றாக கேட்கும்.
எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகமான சுற்றுலா பயணிகள் இங்கு செல்வதுண்டு. இந்நிலையில் நேற்று மாலையில் சுமார் 4:30 மணியளவில் Henry Sheperdson என்ற 38 வயது நபர் தன் 9 மாத குழந்தையை உடலுடன் பொருத்தப்பட்ட பையில் வைத்திருந்தார். இவர் திடீரென்று அணையின் சுவற்றில் வேகமாக ஏறியுள்ளார்.
இதனால் அங்கிருந்தவர்கள் அவரை சமாதானம் செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால் அவர் எதையும் கேட்காமல் குழந்தையுடன் 118 அடி உயரத்திலிருந்து குதித்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்த மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சிறப்பு பயிற்சி பெற்ற அவசர குழுவினர் விரைந்தனர். ஆனால் அதற்குள் henry பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குழந்தை சுயநினைவற்ற நிலையில் கிடந்துள்ளது. எனினும் குழந்தையை காப்பாற்றுவதற்கு அவசர உதவி குழுவினர் எவ்வளவோ முயன்றும் குழந்தையை காப்பாற்ற முடியாமல் போனது.
அதாவது henry மனைவியை பிரிந்தவர். எனினும் அவருக்கு தன் குழந்தையை பார்க்க சட்டப்படி அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் ஏற்கனவே குழந்தையை கடத்துவதற்கு முயற்சி செய்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். இதனால் நீண்ட காலமாகவே henry மற்றும் அவரின் மனைவிக்கு இடையே பிரச்சனை இருந்திருக்கிறது.
எனவே இதற்கு முன்பு குழந்தை மற்றும் மனைவியையும் கொன்று விடுவதாகக் henry மிரட்டியுள்ளார். இந்நிலையில் குழந்தையுடன் அவர் தற்கொலை செய்து கொண்டதால் அவரது மனைவி மீளா துயரத்தில் உள்ளார்.