Categories
மாநில செய்திகள்

9 மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 15 இடங்களில் மிக கன மழையும், 34 இடங்களில் கன மழையும் பெய்துள்ளது.

தொடர் கனமழை காரணமாக பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதனால் மாணவர்களின் நலனைக் கருதி இன்று 23 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நவம்பர் 29ஆம் தேதி அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்பதால் தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |