Categories
மாநில செய்திகள்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்…. மாநில தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு,வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை மற்றும் தென்காசி ஆகிய  மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்  வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய  தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்க இருக்கிறது. அதனால்   தேர்தலின்போது வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை  தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது .

இந்நிலையில் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் ஆட்சியர்களுடன்  மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தலைமையில் காணொளி காட்சி மூலமாக நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .  அதில்  9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் 28 மாவட்டங்களில் கொரோனா விழிப்புணர்வு பணிகளை மேற்கோள்வது தொடர்பாக ஆலோசிக்கபட்டது .

இது குறித்து தேர்தல் ஆணையர் கூறுகையில்  வேட்பாளர்கள் மற்றும்  தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் அனைவரும்  100% தடுப்பூசி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும் . அதுமட்டுமில்லாமல்  பொது மக்களுக்கும் தடுப்பூசி போடும் படி  விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் . வேட்பாளர்கள் அனைவரும் முககவசம் அணிந்து  சமூக இடைவெளி மற்றும் கூட்டங்களை அதிகம் சேர்க்காமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் .

தேர்தலின்போது வாக்குச்சாவடிகளில் வெப்பமானி, கைத்தெளிப்பான், முகக்கவசம், கையுறைகள், பி.பி.இ, கிட்ஸ் வாக்காளர்களுக்கான கையுறைகள் ஆகியவை தமிழ்நாடு மருத்துவகழகத்தின் மூலம் மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும்  பிரவுன்டேப் பஞ்சு மற்றும் குப்பைவாளிகள் போன்றவை மாவட்ட அளவில் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளபடுகிறது.

இதையடுத்து தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக அரசியல் கட்சிகள், பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்கள் புகார்கள் ஏதும் இருந்தால் மாநில தேர்தல் ஆணையத்தின் தரைத்தளத்தில் அமைக்கப்படும் 24 மணி நேரம் புகார் சேவை மையதில் புகாரளிக்கலாம் . பொதுமக்கள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக புகார்கள் தெரிவிக்க வேண்டும் என்றால்  கட்டணமில்லா தொலைபேசி எண்களான  1800 425 707, 1800 425 7073 ,1800 425 7074 எண்களில் புகார் தெரிவிக்கலாம்.

Categories

Tech |