தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசியல்கட்சியினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகளை மாநில தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
அதன்படி காஞ்சிபுரம்-அமுதவல்லி, செங்கல்பட்டுசம்பத், விழுப்புரம்- பழனிச்சாமி, கள்ளக்குறிச்சி- விவேகானந்தன், வேலூர்- விஜயராஜ் குமார், ராணிப்பேட்டை- மதுமதி, திருப்பத்தூர்- காமராஜ், நெல்லை- ஜெயகாந்தன், தென்காசி-பொ.சங்கர் ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.