தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதற்காக கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதையடுத்து இன்று மாலை 5 டன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. மொத்தம் 27,003 இடங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. நேற்று வரை 64,299 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வருகின்ற 23 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் செப்டம்பர் 25 என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மேலும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அக்டோபர் 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.