Categories
மாநில செய்திகள்

9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

இந்நிலையில் தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வு நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் கே. நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை குறைக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலமாக 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்றலை மேம்படுத்த புத்தாக்க பயிற்சி கட்டகம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரி தாவரவியல், விலங்கியல், உயிரி விலங்கியல் உள்ளிட்ட அனைத்து பாடங்களுக்கும் தலா 60 கொள்குறி மதிப்பீடு வினாக்கள் முதற்கட்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை நாளை மாலை 5 மணிக்கு ஒரு மணி நேரம் அவகாசம் வழங்கி தலைமை ஆசிரியர்கள் நடத்த வேண்டும். அதற்கான உரிய அறிவுரைகள் அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |