தமிழகத்தில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து வரும் நிலையில் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட்டு வருகிறது.
மேலும் ஒருசில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கு மத்தியில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் முதல் கட்டமாக 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க ஆலோசித்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் சிஎஸ்ஆர் மூலம் தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு அனைவரும் உதவ முன்வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.