Categories
தேசிய செய்திகள்

9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு…. முதல்வர் புதிய அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப் படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். கொரோனா பாசிட்டிவ் சதவீதம் இரண்டு சதவீதத்திற்கும் கீழ் உள்ள மாவட்டங்களில் மட்டும் பள்ளிகள் திறக்கப்படும். பள்ளி வளாகத்திற்குள் நுழைய மாணவ மாணவிகளின் அனைத்து பெற்றோர்களும்,பள்ளி ஆசிரியர்களும் தடுப்பூசி போட்டு இருப்பது கட்டாயம் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |